மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் 70 ஆவது ஆண்டு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு

-மட்டக்களப்பு நிருபர்-

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலமான ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் வருடாந்த திருத்தலத் திருவிழா ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் மற்றும் அருட் தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியினை ஒப்புக் கொடுத்தனர்.

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா பங்குத்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தினமும் மாலை திருசெபமாலை, மறைவுரைகள் திருப்பலி இடம்பெற்றது.

அன்னையின் வருடாந்த திருத்தலத் திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிகோலஸ் ஆலயத்தில் இருந்து திருத்தலம் நோக்கிய பாத பாதயாத்திரை இடம்பெற்றதுடன் மாலை விசேட மறைவுரையுடன் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து அன்னையின் திருச் சொரூபப் பவனியும் விசேட திருப்பலியும் இடம்பெற்றது.

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை மட்டக்களப்பு ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட அரச அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

திருப்பலியைத் தொடர்ந்து அன்னையின் திருச்சொரூபப் பவனியும் திருச்சுருவ ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ,மண்முனை மேற்கு வவுனத்தீவு பிரதேச செயலாளர் சத்தியானந்தி , ஆகியோர் இணைத்து கொடி இரக்கத்துடன்
திருத்தல வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.

திருவிழா திருப்பலியில் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் , 243 ஆவது இராணுவப் படைப்பிரிவு கட்டளை அதிகாரி சந்திம குமார சிங்க, அருட் சகோதரிகள், மாவட்டத்தில் பல பகுதியிலிருந்து வருகை தந்து கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை, ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல
சிரேஸ்ட பங்கு சபையினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.