
மட்டக்களப்பில் ஹர்த்தாலுக்கு ஆதரவு?
வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மட்டக்களப்பில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்படவில்லை.
அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன, வங்கிகள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் என்பன வழமை போன்று இயங்குகின்றன.
சந்தைகளில் விற்பனை நடவடிக்கைகள் வழமையாக நடைபெறுவதுடன் வர்த்தக நிலையங்கள் அனைத்து திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

