மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

கிரான் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டன.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட முருக்கந்தீவு மற்றும் பிரம்படித்தீவு, சராவெளி கிராமங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடந்த வியாழக்கிழமை உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

லண்டன் ஸ்ரீ கனாகதுர்க்கையம்மன் ஆலயயத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராசா மாற்றும் உதவி திட்டமிடல்பனிப்பாளர் எஸ்.சிவநேசராசா,கிராம உத்தியேகஸ்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக பிரதிநிகள் கலந்து கொண்டனர்.