
மட்டக்களப்பில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு
கிரான் – கோராவெளி வடிச்சல் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
கிரான் கண்ணகியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கா.குருபரன் (வயது – 53), சந்திவெளி திகிலிவெட்டை பகுதியை சேர்ந்த மா.விநாயகமூர்த்தி ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்த இருவரும் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் புலிபாய்ந்த கல் வீதியில் வைத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டிந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ள நீரானது இதுவரை வழிந்தோடாத காரணத்தினால் குறித்த பிரதேசத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காணப்படுவதுடன் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நன்மை கருதி படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
