மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்கள்: 30 கோடி ரூபா நஷ்டம்

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலச்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளாதாகவும் எனவே அரசாங்கத்திடம் நஷ்டஈடுவழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுணதீவு பிரதேச செயலகபிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் அறுவடை தருவாயில் இருந்த இறால்கள் அடித்து செல்லப்பட்டு அருகிலுள்ள ஆறுகளில் சேர்ந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் 20 வருடத்துக்கு மேலாக 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் இயங்கி வரும் நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு பின்னர் வளர்ப்பு இறாலை பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் திடிரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தினையடுத்து இந்த வளர்ப்பு இறால்களை வளர்த்துவரும் குளங்களில் வெள்ள நீர் உட்புகுந்ததையடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த அணைக்கட்டுகள் உடைபெடுத்ததையடுத்து குளத்திலுள்ள இறால்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு வாவியுடன் கலந்துள்ளது.

இது தொடர்பில் பண்ணையாளர்கள் தெரிவிக்கையில்,

“ஒவ்வொரு பண்ணையாளரும் ஒன்றரை கோடி ரூபா வீதம் 30 கோடி ரூபாவை இழந்துள்ளதுடன் இந்த திட்டத்துக்காக இறால் குஞ்சுகள் மற்றும் அதற்கான தீன்கள் போன்றவற்றை 75 இலச்சம் ரூபாபாவிற்கு கடனாக கொள்வனவு செய்தோம் இவ்வாறு ஒவ்வொரு பண்ணையாளரும் இந்த அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இந்த இறால்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அந்நிய செலாவனியை கொண்டுவந்தோம் இருந்த போதும் இந்த பாதிப்பால் மகவும் பாதிபடைந்துள்ளோம் எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்”.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்