மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறும் பயனாளி ஒருவரின் வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சமுர்த்தி செளபாக்கியா விஷேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் பயனாளி ஒருவருக்கு வீடு வழங்கும் அவ் வீட்டுக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

6 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அரச நிதியுடன் பயனாளியின் பங்களிப்புடன் இவ் வீடு அமையவிருக்கின்றது

இவ் அடிக்கல் வைக்கும் நிகழ்வில் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே. தங்கத்துரை, வங்கி வலய முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி செளபாக்கியா வேலைத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் வீடற்ற அல்லது பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்ந்து வரும்
குடும்பங்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தினால் கடந்த சில ஆண்டுகளாக வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.