மட்டக்களப்பில் விஸ்அக்ட் புதிய செயலி அறிமுகம்

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்காட்டுவதற்கான விஸ் அக்ட் (VisAct) செயலியானது டிரிம் ஸ்பேஸ் அக்கடமியின் பணிப்பாளர் என். கிசோத் தலைமையில் கல்லடி கிறின்கார்டன் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

மக்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இச் செயலி யு எஸ் எயிட் (US Aid) மற்றும் குளோபல் கொமியுனிட்டி (Global communities) நிறுவனங்களுடன் இணைந்து இச் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முதற்கட்டமாக இச் செயலியை மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக எதிர் நோக்கும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றுக்கான தீர்வுகளை வழங்கக்கூடிய உரிய அதிகாரி அல்லது பொறுப்பான நபர்களுக்குத் துரித கதியில் தெரிவிப்பதற்கான ஊடகமாக இச் செயலி செயற்படவுள்ளது.

அரச உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் இணைந்து இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஜி.பிரணவன், உதவிப் பிரதேச செயலாளர், வைத்திய அதிகாரிகள், வலயக் கல்வி அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை உயர் அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்