மட்டக்களப்பில் விவசாயப் பயிற்சியினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு கல்லடி விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவில் நடத்தப்பட்ட விவசாய செய்முறைப் பயிற்சி நெறியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம் பெற்றது.

பி .எஸ். டி.நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் மாவட்டத்தில் 14 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நஞ்சற்ற வீட்டுத் தோட்ட விவசாயப் பயிர்ச் செய்கையினை நடைமுறைப்படுத்தும் விவசாயிகளுக்கான வீட்டுத் தோட்ட களப் பாடசாலை பயிற்சிகள் நடத்தப்படுகின்றது.

அந்த வகையில் கல்லடி விவசாயப் போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விவசாயிகளுக்கான பாடசாலை பயிற்சிகள் 12 வாரம் வழங்கப்பட்டு பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு களப்பாடசாலை தலைவி வினிசியா தலைமையில் இன்று வீட்டுத் தோட்ட பயனாளி டேவிட் விஜிதா வீட்டு தோட்ட வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லடி விவசாய போதனாசிரியர் வேனி திருணவன் ஏற்பாட்டில் களப்பாடசாலை தலைவி வினிசியா தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பரமேஸ்வரன், உதவி விவசாய பணிப்பாளர் சித்திரவேல் மற்றும் கல்லடி விவசாயப் பிரிவு அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இருதயபுரம் மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவு வீட்டுத்தோட்ட பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்