மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பில் இன்றைய தினம் புதன் கிழமை பாலமுனை சந்தியிலிருந்து ஆரையம்பதி வைத்தியசாலை வரையில் வீதி வரை விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு CARITAS நிறுவகத்தின் அனுசுரனையுடன் தல சீமியா செயற்திட்டத்தின் கீழ் இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது, பாலமுனை சந்தியிலிருந்து நடை பேரணியாக ஆரையம்பதி மாவட்ட வைத்திய சாலயை வந்தடைந்தது.

இதில் இரத்த தானம் செய்வோம் உயிரைக் காப்போம் எனும் பல்வேறுபட்ட பதாகைகளை ஏந்திய வாறும் வந்தனர்.

இவ்விழிப்புணர்வு பேரணியானது CARITAS நிறுவகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எஸ். எல் ஜெய நிக்சன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.