
மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கந்தை பகுதியில் இருந்து கிரான் பகுதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கனரக வாகனம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
