மட்டக்களப்பில் மீன்மகள் தயாரிப்பில் இரண்டாவது படத்துக்கான பூஜை நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பின் மண்வாசனையைக் கருப்பொருளாகக் கொண்டு மீன்மகள் தயாரிப்பில் இரண்டாவதாக வெளிவரவிருக்கும் படத்துக்கான பூஜை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னைமாதா ஆலயத்தில் இடம்பெற்றது.

ஆலயப் பங்குத் தந்தை வணபிதா சொலமன் அடிகளாரால் ஆசீர்வதிக்கப்பட்டு,ஆராதனையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், படநடிகர்கள்,ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இத்திரைப்படத்தின் கதையை பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி எழுத,வசனத்தை சரோஜித் பிறேம்குமாரும்,தயாரிப்பு மேற்பார்வையினை சர்வணன் கவனிக்க,தயாரிப்பினை அனா கத்லின் கெனடி கவனிக்கிறார். அத்தோடு மீன்மகள் நிறுவனம் படத்தைத் தயாரிக்க,இசையமைப்பினை ஏ.ஜீ.சங்கர்ஜனும்,படத்தின் முழு இயக்கத்தினை குழந்தைவேல் கோடீஸ்வரனும் மேற்கொள்ளவுள்ளனர்.

இப்படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பமாவதோடு,இரண்டு மாதங்களில் படம் திரைக்கு வரும் என திரைப்படத்தின் இயக்குனர் குழந்தைவேல் கோடீஸ்வரன் “மின்னல் செய்திச்சேவை” க்குத் தெரிவித்தார்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்