மட்டக்களப்பில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கி இளைஞர் மரணம்

மட்டக்களப்பு – புனானை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதன் போது மட்டக்களப்பு – புனானை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சுகவீனம் காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்ததாகவும், இந்த நிலையில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்பிடி வலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.