
மட்டக்களப்பில் மீட்கப்பட்ட சடலம்: அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
மட்டக்களப்பு பாலமீன் மடு பகுதியின் மட்டிக்களி மீன் சந்தைக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட குறித்த சடலமானது பச்சை நிற சேட் மற்றும் சிவப்பு நிற காட்சட்டை அணிவித்திருந்ததுடன் காதிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இது வரையிலும் பொலிஸாரால் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் தொடர்பிலான விபரங்கள் தெரிந்தவர்கள் தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


