
மட்டக்களப்பில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கருவப்பங்கேணியை சேர்ந்த 11 பிள்ளைகளின் தந்தையான ஆரியவன்ச விஜயரட்ணம் (வயது – 89) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட முரன்பாடுகளையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய குறித்த நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் காத்ததான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
