மட்டக்களப்பில் மாணவியின் சடலமாக மீட்பு -படங்கள் இணைப்பு-

-அலுவலக நிருபர்-

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பண்டிங்ஸ் வீதியைச் சேர்ந்த திருச்சந்திரன் ஸஹரா (வயது-22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என தெரியவருகின்றது.

குறித்த மாணவி பிற்பகல் 2 மணியளவில் கல்லடிப்பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் தொழிவித்துள்ளனர்.

இச்சம்பாவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை , இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக, மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் மாணவியின் சடலமாக மீட்பு