மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களை நிம்மதியாக வாழவிடுமாறும் இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் காந்தி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து அவலங்களை எதிர் கொண்டவர்கள். யுத்தம் முடிவின் பின்னரே அமைதியான வாழ்க்கை வாழுகின்றோம். இத்தகைய அமைதியை குழப்பாதீர்கள் என கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் பயங்கரவாத பிரிவினைக்கு கனடா ஆதரவா? இதுவா அமைதி ? இதுவா நீதி? ஐ.நாவின் கோட்பாடுகளை மீறி கனடா அரசு இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவதை கண்டிப்போம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்