மட்டக்களப்பில் மகள் மீது தந்தை பாலியல் சேட்டை: தாயார் முறைப்பாடு

மட்டக்களப்பு – கொக்குவில் பிரதேசத்தில் மகள் மீது தந்தை பாலியல் சேட்டை புரிந்ததாக தாய் பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய தந்தை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயதுடைய மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த 58 வயதுடைய தந்தையை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.