மட்டக்களப்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டிகள்

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை வெபர் மைதானத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் வலைப்பந்தாட்ட போட்டியானது, இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் இ மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் ந.தனஞ்சயன் , பிரதேச செயலாளர்கள் பதவி நிலை உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு  மகளிர் தின நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டிகள்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24