மட்டக்களப்பில் நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” நூல் அறிமுக விழா

மட்டக்களப்பில் நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” நூல் அறிமுக விழா

கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர் பைந்தமிழ்சுடர்.சி. சுதாகரனின் கிடுகு வீடு (கவிதைத் தொகுப்பு) நூல் அறிமுக விழா எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு  பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் ( உபவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம்)  மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நூல் அறிமுக விழாவிற்கு ஆன்மிக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி சுராச்சிதானந்தர் மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சந்திரகாந்தன் , ச.வியாழேந்திரன் , கோ.கருணாகரன் , இரா. சாணக்கியன் , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் மாநகர முதல் தி.சரவணபவன், ஆகியோர் உட்பட மட்டு . முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நூல் அறிமுக விழாவிற்கு அனைவரையும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.