மட்டக்களப்பில் நிறுத்தப்பட்ட த.ம.வி.புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு

மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடக சந்திப்பு இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய குறித்த ஊடக சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் வியாழக்கிழமை பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் எவ்விதமான கூட்டங்களும் இடம்பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.