மட்டக்களப்பில் நாளை நீர் வழங்கல் தடை!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியை சுத்தப்படுத்துவதால்
நடவடிக்கை காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
நீர் வழங்குதல் தடைப்படும்.

இதனால் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைபற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று,
கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மத்தி,
கோறளைப்பற்று மேற்கு பிரதான சேவைகளுக்குட்பட்ட நீர் பயன்பாட்டாளர்களுக்கு
நீர் வழங்குதல் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகவே வழங்கப்படும் நீரை முன்னரே சேமித்து வைத்து தங்கள் தேவைகளுக்கு
பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.