மட்டக்களப்பில் நடக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் காட்டு யானை
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது என இன்று திங்கட்கிழமை வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு நடக்க முடியாமல் விழுந்து கிடக்கும் யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடும் வெயிலில் கிடக்கும் யானையை பாதுகாக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச சபையினால் தண்ணீர் வழங்கும் செயற்படுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
