மட்டக்களப்பில் தொடர் மழை: நீரில் மூழ்கும் தாழ் நிலங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, எருவில், பட்டிருப்பு,  குருமண்வெளி போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வயல் நிலங்களும் பதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்