மட்டக்களப்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் பங்களிப்புடன் மூலோபாயத்திட்டம்- வீடியோ இணைப்பு-

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்புடன்  மூலோபாயத் திட்டம் (2026 – 2029) தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரனி எம்.பி.எம் சுபியான் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீரத்நாயக்க கலந்து கொண்டார்.

இதன் போது மூலோபாயத்திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு செயற்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் பங்களிப்பு மூலோபாய எதிர்கால திட்டம் (2026 – 2029 ) தொடர்பான தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்தனர்.

மேலும் மக்கள் வாக்களிப்பு பங்கேற்பை அதிகரித்தல், தேர்தல் சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் பங்களிப்பை அதிகரித்தல் போன்ற மேலும் பல விடையங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ்.மாதவ, திட்டமிடல் பணிப்பாளர் சன்ன பி.டி. சில்வா மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.