
மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக இன்று சனிக்கிழமை சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு இடம்பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
இதன் முதலாவது நிகழ்வாக புளியந்தீவு வாவிக்கரை வீதி – 02 இல் அமையப் பெற்றுள்ள சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையம் (VlKAS) அடிக்கல் நாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


