
மட்டக்களப்பில் தாய்ப்பால் புரைக்கேறி 13 நாள் பெண் குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறிய பெண் குழந்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது.
இருதயபுரம் பகுதியை சேர்ந்த பிறந்து 13 நாட்கலேயான பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாயார் தாய்ப்பால் வழங்கிய நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் நேற்று செவ்வாய் கிழமை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
