மட்டக்களப்பில் தடைப்பட்ட போக்குவரத்து , மின்சாரம் தடை

மட்டக்களப்பு போரதீவுபற்றின் பல பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து , மின்சாரம் தடையை அடுத்து, பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில், மின்சார சபை குழுவினர் குறித்த பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை சென்றனர்.

வீதிகள் தோறும் மரங்கள் முறிந்து கிடந்த நிலையில் , இதனை போரதீவு பற்று பிரதேச சபை ஊழியர்கள் வெட்டி அகற்றினார்கள் , மின்சாரசபை ஊழியர்களினால் மின்சாரம் மீண்டும் சீர்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட மண்டூர் கிராமத்தில் அதிக காற்று வீசியதன் காரணமாக நேற்றிரவு முதல் மின் தடை ஏற்ப்பட்டிருந்தது.

களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதான மற்றும் இ வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் இ குருமன்வெளி மண்டூர் பாதைப்படகுச்சேவையினூடாக சென்று மின்சாரத்தினை சீர்செய்தமை குறிப்பிடத்தக்கது .