மட்டக்களப்பில் சீரற்ற வீதியில் குறுக்கறுத்து செல்லும் ரயில் தண்டவாளம்

-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-

மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும்பணி இன்று வியாழக்கிழமை காலை 7 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது.

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் குறித்த தண்டவாளங்கள் காணப்பட்டதுடன் இதில் பயணிக்கும் ரயில்களும் மிகுந்த அச்சத்தில் பயணித்ததுடன் தற்போது இந்த நிலைமை சீர் செய்யப்பட்டுகொண்டிருக்கின்றது.

இதேவேளை குறித்த கடவை காணப்படும் பகுதியில் உள்ள பாதையானது சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது. எனவே உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து இந்த பாதையை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.