மட்டக்களப்பில் சாந்தனுக்கு அஞ்சலி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்டகால சிறைவாசத்தின் பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை சாந்தனின் திருவுருவப்படத்திற்கு பூமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்