
மட்டக்களப்பில் சாணக்கியனுக்கு எதிராக துண்டுப்பிரசுரம்
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வாகரை பிரதேசத்தின் பல பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த துண்டு பிரசுரங்களானது வாகரை பிரதேச கல்விமான்கள் புத்திஜீவிகள் எனும் பெயரில் வெளியீடப்பட்டுள்ளது.
வாகரை கண்டலடி துயிலும் இல்லம் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டமை தொடர்பாக இத் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

