மட்டக்களப்பில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு!

-மட்டக்களப்பு நிருபர்-

சர்வதேச போதைப் பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொரு ள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ்இ மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில், ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை  மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக ஆரம்பமானது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வில், போதைப் பொருள் புணர்வாழ்வு மையத்தின் இரானுணுவ அதிகாரியும் கலந்து கொண்டார்.

இதன்போது போதைப் பொருள் பாவனையின் விபரீதங்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தம்சங்கள் கொண்ட பதாகைகள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

அத்தோடு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் பயணித்தோருக்கு விநியோகம் செய்யப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்