மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கிகளை கணினி மயமாக்கும் செயற்திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளை கணினி மயமாக்கல் ஊடாக சமுர்த்தி வங்கிகளின் செயல்பாட்டை துரிதப்படுத்துவதற்கான செயலமர்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், வங்கி சங்க முகாமையாளர்கள், கணக்காய்வு உத்தியோகத்தர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.

உத்தியோகத்தர்களினால் கணினிமயமாக்கும்போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அவற்றுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சமுர்த்தி வங்கிகளின் கணினி பிரிவுக்கான தொழில் நுட்ப உத்தியோகத்தர் த.பவளேந்திரன் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் மற்றும் மாவட்ட செயலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கிகளை கணினி மயமாக்கும் செயற்திட்டம்

மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கிகளை கணினி மயமாக்கும் செயற்திட்டம்

</ul