மட்டக்களப்பில் திருட்டு முதலை பிடிபட்டது -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை தினம்தோறும் இரவு நேரங்களில் விழுங்கி வந்த முதலை செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதி பொது மக்களினால் சுருக்கு போட்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையாரடி நாகையா வீதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் நேற்று இரவு வீட்டுக்குள் முதலை புகுந்ததும் அப்பெண் அச்சத்தில் கூக்குரலிடவே அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் முதலையை சுருக்கிட்டு கட்டிப் போட்டுள்ளனர்.

குறித்த முதலை சில தினங்களாக இரவு வேளைகளில் உட்புகுந்து அங்கு வளர்த்துவரும் கோழிகளை பிடித்து உண்டுவந்துள்ளது.

இப்பகுதிகளில் கோழிகள் காணமல் போயுள்ள நிலையில் இது கோழி திருடர்களின் கைவரிசையாக இருக்கும் என பொது மக்கள் எண்ணிய நிலையில் திருட்டு முதலை பிடிபட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த திருட்டு முதலையை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்ததுடன் வனவிலங்கு திணைக்களம் , பொலிசாருக்கு அறிவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க