
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடன் இந்திய உயஸ்தானிகர் சந்திப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக முன்னாள் மாநகர சபை முதல்வர் , இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்; கலந்து கொண்டதோடு ,இச் சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் இவர் கிழக்கு மாகாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினையும் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

