
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கர்பிணி தாய்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 8 மாத கர்பிணி பெண் வீட்டின் அருகில் இருந்த பொதுக்கிணற்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாந்தாமலை பிரதேசத்தை சேர்ந்த 8 மாத கர்பிணி பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது தாயின் வயிற்றினுள் இருந்து இறந்த நிலையில் ஆண் சிசு வெளியில் எடுக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இருவரின் சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த பெண் தவறி கிணற்றினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

