மட்டக்களப்பில் கால்வாயினுள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

மட்டக்களப்பு – வெல்லாவெளி போரதீவுப்பற்று பகுதியில் கால்வாயினுள் விழுந்து நேற்று சனிக்கிழமை குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

போரதீவுபற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த முருகேசு விஹான் (வயது – 1 வருடம் 5 மாதம்) என்ற குழந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளது.

குழந்தையின் வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் நேற்று சனிக்கிழமை குழந்தை விழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்