
மட்டக்களப்பில் கவிக் கூடல் நிகழ்வு
மட்டக்களப்பு பொது நூலகமும் மட்டக்களப்பு மாவட்ட பாண்பாட்டு அலுவலகமும் இணைந்து நடாத்தும் கவிக் கூடல் நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கவிக் கூடல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் மலர்ச்செல்வன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முத்த கவிஞர்கள் உட்பட தற்காலத்து கவிஞர்கள் வரை கலந்து கொண்டு தங்களால் எழுதப்பட்ட கவிதைகளை வாசித்து ஏனைய கவிஞர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதேவேளை இலக்கிய வாழ்வு நவீன சமுகத்தினரிடையே கைவிடப்பட்டு செல்லுகின்ற நிலையில் இவ்வாறான இலக்கிய நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என இங்கு வருகை தந்திருந்த கவிஞர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
