மட்டக்களப்பில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்!
மட்டக்களப்பு – சின்னஉப்போடை லேக்வீதி வாவிப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது
கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில், நீரில் மூழ்கிய நிலையில் இன்று சனிக்கிழமை காலை, குறித்த சடலம் கரையொதுங்கி இருப்பதை கண்டு, பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்
இவ்வாறு கரைஒதுங்கியுள்ள சடலம், 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என்றும், எனினும் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும், குறித்த பகுதியின் கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்
குறித்த பகுதியிலோ அல்லது அதனை அண்டிய பகுதிகளிலோ யாரும் காணாமல் போயுள்ளதாக, எவ்வித தகவல்களோ, முறைப்பாடுகளோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்