
மட்டக்களப்பில் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடிம்பிமலை கிராம சேவகர் பிரிவில் மியங்கல் குளம் எனும் இடத்தில் காட்டு யானையொன்று இறந்த நிலையில் உள்ளதாக இன்று சனிக்கிழமை கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
14 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான யானையொன்றே வயல் காணிக்குள் இவ்வாறு இறந்த நிலையில் கிடந்துள்ளது.
கிரான் வனவிலங்கு திணைக்களத்தினரால் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் காட்டு யானைகள் குடிம்பிமலை மியான்கல் குளம் அதனை அண்டிய பிரதேசங்களில் விவசாய நிலங்கள் மற்றும் சேனை பயிர்செய்கைகள் காணிகள், மக்கள்குடியிருப்பு நிலங்களுக்குள் ஊடுருவி சேதம் விளைவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
