மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.

கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கரை ஒதுங்கிய 30 கிலோ எடை கொண்ட கடலாமையை அவதானித்துள்ளனர்.

கடலாமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடமும் கிழக்கு கடற்கரை பரப்பில் பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.