
மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பில் எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியானின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளூராட்சித் தேர்தலுக்கு மேற்கொள்ளப்படவுள்ள முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், முப்படை உயர் அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature