மட்டக்களப்பில் “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” இரத்ததான நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் இ.முரளீஸ்வரன் எண்ணக்கருவில் உருவான “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்”” என்னும் தொனிப்பொருளில் இரத்ததானம் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேச வைத்திய சாலையில் இன்று புதன்கிழமை இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது..
வைத்திய அதிகாரியான சி.சிவலக்சன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் உட்பட உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்