மட்டக்களப்பில் இளம் விவசாயி பலி

மட்டக்களப்பு வெல்லாவெளி சின்னவத்தை பகுதியில், இளம் விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, 28 வயதுடைய இளம் விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில், தாம் மேற்கொண்டுள்ள பயிர்ச்செய்கையை பார்வையிட சென்றபோது, வயல் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்