
மட்டக்களப்பில் இரண்டாவது நாளாக தொடரும் பணிப்பகிஸ்கரிப்பு : சந்தேகநபர் தலைமறைவு
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடர்கிறது.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவர் தனியார் பேருந்து சாரதி ஒருவரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான சாரதி கடந்த திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பிலிருந்து அம்பிலாந்துறைக்கு பேருந்தை ஓட்டிச்சென்ற போது தனியார் பேருந்து சாரதியால் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த சாந்தலிங்கம் என்பவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பாவற்கொடிசேனை ஊத்துமடு பகுதியை சேர்ந்த சிவலிங்கம் ஜெயமோகன் என்பவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி அவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கீழே புகைப்படத்தில் உள்ள சந்தேகநபரை கண்டால் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை ஊழியர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து சாரதி தாக்குதல்
மட்டக்களப்பு இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

