மட்டக்களப்பில் இடம் பெறும் ஓவிய கண்காட்சி
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கிழக்கின் ஓவிய திருவிழா என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை , நாளை சனிக்கிழமை மற்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக, கிழக்கு பல்கலை கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
