மட்டக்களப்பில் இடம்பெற்ற தாய்மொழி தின நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகமும் மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டலுவலகமும் இணைந்து நடத்தும் சர்வதேச தாய்மொழிதினம் இன்று புதன் கிழமை காலை மட்/ விவேகாந்தா பெண்கள் மகா வித்தியாலயத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் மலர்ச்செல்வன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது மொழி திறனை வெளிபடுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னால் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.