மட்டக்களப்பில் இடம்பெற்ற விவசாய மீளாய்வு கூட்டம்

-கிரான் நிருபர்-

விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விவசாய ரீதியிலான முன்னேற்ற செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர் மஸ்தான்  தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்றது.

விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர  வட மாகாணம்இகிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவற்றின் விவசாய முன்னேற்ற செயற்பாடுகளை நிர்வகித்து மேற்பார்வை செய்யும் பொறுப்பு கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தானுக்கு  வழங்கப்பட்டுள்ளதையடுத்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மீளாய்வுக் கூட்டமே இன்று இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் திணைக்களங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் அதனை தீர்ப்பதற்கான சாதகமான தீர்மானங்கள்இ உள்ளூர் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு முனைப்பான அம்சங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன அத்துடன் குறைந்த மூலதனத்துடன் கூடிய விவசாய உற்பத்திகளை பெற்றுக்கொள்ளக்கூடிய தானியங்களை இனம் கண்டுகொள்வது சம்பந்தமாகவும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு விடுவது தொடர்பிலும் மற்றும் நெல் அறுவடை தொடங்கியுள்ளதனால் நெல்லுக்கான நிர்ணய விலை இன்மையால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனையினால் அதனை நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல்லினை கொள்வனவு செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கையினை முன்வைத்தார்

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய குழுவின் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜா மற்றும், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாகாண மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர்கள், மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர்கள், விவசாய அமைச்சுடன் தொடர்புடைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொருளாதார இராஜாங்க அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்