
மட்டக்களப்பில் இடம்பெற்ற வைகுண்ட ஏகாதசி விரத பூஜை நிகழ்வு
விரதங்களில் சிறந்த விரதமாகக் கருதப்படும் சொர்க்க வாயில் வைகுண்ட ஏகாதசி விரத பூஜை மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வெகு சிறப்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கிழக்கில் மிகவும் பிரசித்தி வாய்ந்த திருத்தலமாக திகழும் வந்தாறுமூலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் நான்கு சாம பூஜைகள் இடம்பெற்றன. இதில் பெருந்திரளான பக்தர்கள் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்து விரதத்தை அனுஷ்த்திருந்தனர்.
கண்ணன் பஜனை குழுவினரால் அன்றைய தினம் ஆலயத்தில் கண் விழித்திருக்கும் பக்தர்களைக் கவரும் வகையில் ஆலய மண்டபத்தில் கலை நிகழ்வுகளும், சமய சொற்பொழிவுகளும், பக்தி பாமாலை என்னும் இசை நிகழ்வுகளும், பஜனை நிகழ்வுகளும், இடம் பெற்றன.
பூஜை நிகழ்வுகள் யாவும் நவக்கிரக பூஜை, விஷ்ணு பூஜை சாச்சிநாத தேவேந்திர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
