மட்டக்களப்பில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது வரையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தை உறுதிப்படுத்து, பட்டம் வீட்டில் நாங்கள் ரோட்டில், எங்கள் கனவுகளை அழிக்காதே, நியமனம் வேண்டும் என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் பாக்கியராசா செந்தூரன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்,
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்