மட்டக்களப்பில் இடம்பெறும் மூன்று நாள் புத்தக கண்காட்சி

மட்டக்களப்பில் மூன்று நாள் புத்தக கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

‘புத்தக பண்பாட்டை கட்டி வளர்ப்போம்’ என்னும் தலைப்பில், மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புத்தக கண் காட்சி தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகமும், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகமும் இணைந்து இப்புத்தக கண்காட்சியை நடத்துகின்றது.

இப்புத்தக கண்காட்சி மட்டக்களப்பு பொது நூலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் மு. ப 09. 15 தொடக்கம் பி. ப 07.15 வரை இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வானது, மாவட்ட கலாச்சார இணைப்பாளர் மலர்ச்செல்வன் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு. நா. மதிவாணன், திரு.வ. தேவநேசன் (மாகாண பணிப்பாளர் ), சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு  மாநகர சபை பிரதி ஆணையாளர் திரு. உ. சிவராசா, மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி S. குலேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்